மக்களின் ஜனநாயகம் இன்று பாரிய அச்சுறுத்தலுக்கு  உட்படுத்தப்பட்டுள்ளது-பாட்டலி சம்பிக்க

231 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முறையற்ற செயற்பாட்டின் காரணமாக   இன்று  மக்களின் ஜனநாயகம் இன்று பாரிய அச்சுறுத்தலுக்கு  உட்படுத்தப்பட்டுள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

மேலும் மஹிந்த மைத்திரியின் இடைப்பட்ட ஆட்சியில் பெற்றோலின் விலை குறைக்கப்பட்டுள்ளது என்று பொதுமக்கள் திருப்திப்பட்டுக் கொள்ளவேண்டாம். உயர்தர மாணவர்களுக்கு தேசிய அரசாங்கத்தில் வழங்க இருந்த இலசவ மடிக்கணனி திட்டத்தினை இரத்து செய்தே குறித்த  இடைக்கால விலைக் குறைப்பு  வழங்கப்பட்டுள்ளது.

மஹிந்த, மைத்திரி ஆகியோரின் சுய தேவைகளுக்காக மாத்திரமே ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தான் மீண்டும்  ஆட்சி பீடம்  ஏற வேண்டும் என்ற பதவி மோகம்  காணப்பட்டது. இதற்காகவே அவர் தான் 6 வருட காலம் பதவியில் இருக்க முடியுமா என்று உயர்நீதிமன்றத்தில் சட்ட வியாக்கியானம் கோரினார் எனவும் தெரிவித்தார்.

Leave a comment