சோமாலியாவில் கார் வெடிகுண்டு தாக்குதல்; பலி எண்ணிக்கை 53 ஆக உயர்வு

17451 29

சோமாலியா நாட்டில் ஓட்டல் ஒன்றின் வெளியே நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் பலி எண்ணிக்கை 53 ஆக உயர்வடைந்து உள்ளது.

சோமாலியா நாட்டின் மொகதிசு நகரில் நட்சத்திர ஓட்டலில் அரசு அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டினர் வந்து தங்கி செல்வர்.  இந்த நிலையில், ஓட்டலின் வெளியே 4 கார் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.  முதலில் 3 வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்த பின் காயமடைந்து சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வந்தது.  இதனை தொடர்ந்து 4வது வெடிகுண்டு தாக்குதலும் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர். 17 பேர் படுகாயம் அடைந்தனர் என முதலில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பலியானோர் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.  100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.  இதுபற்றி மூத்த காவல் துறை அதிகாரி உசைன் கூறும்பொழுது, பலர் தீவிர காயமடைந்துள்ளனர்.  இதனால் பலி எண்ணிக்கை உயர கூடும் என அச்சம் தெரிவித்துள்ளார்.
அரசு அதிகாரிகளை இலக்காக கொண்டு நடந்த இந்த கார் வெடிகுண்டு தாக்குதல்களுக்கு அல் ஷபாப் என்ற இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் குழுவானது பொறுப்பேற்றுள்ளது.

Leave a comment