கலிபோர்னியா காட்டுத்தீக்கு பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்வு

273 0

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீக்கு பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்வடைந்து உள்ளது.

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தின் வட பகுதியில் சாக்ரமண்டோ நகருக்கு வடக்கே கடந்த 8ந்தேதி முதல் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. 50 மைல் வேகத்தில் பலத்த காற்று வீசியதால் சில மணி நேரத்தில் 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு எரிந்துவிட்டது.

இந்த தீயில் சிக்கி 6 ஆயிரத்து 700க்கும் மேலான வீடுகள், வணிக நிறுவனங்கள் எரிந்து உருக்குலைந்து போய்விட்டன. பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்து விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு போய் விட்டனர்.
இந்த காட்டுத்தீயில் மாட்டிக்கொண்ட 9 பேர் பலியாகினர் என முதற்கட்ட தகவல் வெளியானது. அவர்களில் 5 பேர் தங்கள் கார்களின் அருகிலும், 3 பேர் வீடுகளுக்கு வெளியேயும், ஒருவர் வீட்டுக்குள்ளும் எரிந்து கரிக்கட்டைகள் போல கிடந்ததாக பட்டி கவுண்டிஷெரீப் கோரி ஹோனியா கூறினார்.
இந்நிலையில், இந்த பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.  இது உயர கூடும்.  காணாமல் போன 35 பேரை தேடும் பணியும் நடந்து வருகிறது.  கலிபோர்னியா வரலாற்றில் மிக பெரிய அழிவை ஏற்படுத்திய காட்டுத்தீ இது என ஹோனியா கூறியுள்ளார்.

Leave a comment