வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘கஜா’ புயல் தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்பு – வானிலை மையம்

348 0

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. அதற்கு ‘கஜா’ புயல் என்று பெயரிடப்பட்டுள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை இந்த மாத தொடக்கத்தில் தொடங்கியதாக வானிலை மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால், தமிழகத்தில் கடலோர மாவட்டங்களை தவிர மற்ற இடங்களில் பெரிய அளவில் மழை இல்லை.
இந்நிலையில் வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியது. பின்னர் இது புயலாக மாறியது. இதற்கு ‘கஜா’ என்று பெயரிட்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வடமேற்கு திசையை நோக்கி நகரும் ‘கஜா’ புயல் இரண்டு அல்லது மூன்று நாட்களில் தமிழகத்தை நோக்கி வர வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் இருந்து 990 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த புயல், 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது என்று அறிவித்துள்ளது.

Leave a comment