வட மாகாண மர நடுகை மாத நிகழ்வில் உரையாற்றிய தொல்.திருமாவளவன் (காணொளி)

679 11

வட மாகாண மர நடுகை மாதத்தை முன்னிட்டு, மர நடுகையும், மலர்க் கண்காட்சியும், இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

ஆளுக்கொரு மரம் நடுவோம், நாளுக்கொரு வரம் பெறுவோம் எனும் தொனிப்பொருளின் அடிப்படையில், மர நடுகையும், மலர்க் கண்காட்சியும், யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்கா வாளகத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வு, தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

பிரதம விருந்தினராக, வட மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் கலந்துகொண்டார்.

சிறப்பு விருந்தினராக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் கலந்து சிறப்பித்தார்.

இதன் போது, தொ.திருமாவளவனால் வழங்கப்பட்ட துவிச்சக்கரவண்டிகளும் பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது

Leave a comment