வெடிகுண்டு தாக்குதலுக்கு ஆளான சோமாலியா மக்களுக்கு உறுதுணையாக இருப்போம் – அண்டோனியோ குட்டரஸ்

274 0

வெடிகுண்டு தாக்குதலுக்கு ஆளான சோமாலியா மக்களுக்கு தேவைப்படும் உதவிகள் வழங்கப்படுவதுடன், அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம் என ஐநா பொது செயலாளர் ஆண்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார். 

சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் உள்ள பிரபல உணவகமான சஹாபி அருகே நேற்று அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. 3 கார்களில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்து சிதறியதால் அப்பாவி பொதுமக்கள், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் என மொத்தம் 20 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், வெடிகுண்டு தாக்குதலுக்கு ஆளான சோமாலியா மக்களுக்கு தேவைப்படும் உதவிகள் வழங்கப்படுவதுடன், அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம் என ஐநா பொது செயலாளர் ஆண்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சோமாலியா நாட்டில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் பலியானோர் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுபோன்ற தாக்குதலால் சோமாலியா மக்களை அச்சுறுத்தி விடமுடியாது. வெடிகுண்டு தாக்குதலால் அவதிப்பட்டு வரும் அந்நாட்டு அரசுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபை என்றும் உறுதுணையாக நிற்கும். மேலும் அவர்களுக்கு தேவையான உதவிகளையும் அளிக்கும் என தெரிவித்துள்ளார்.

Leave a comment