சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் சிலர் வெளியேற தீர்மானம்

353 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர்மானித்துள்ளனர்.

இதன்படி புதிய அரசாங்கத்தில் அமைச்சுக் பொறுப்புக்களை பெற்றுக்கொண்டுள்ள சுதந்திர கட்சி உறுப்பினர்கள் பலர் ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளனர்.

புதிய பிரதமர் நியமனம் , பாராளுமன்ற ஒத்திவைப்பு மற்றும் 19 அரசியலமைப்பை மீறும் வகையில் பாராளுமன்றத்தை கலைத்தமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியுடன் ஏற்பட்ட வெறுப்புக்களே இவர்கள் கட்சி மாறுவதற்கான பிரதான காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment