பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை சட்டவிரோதமானது- ஐதே.க

503 0

பாராளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதி சிறிசேனவின் முடிவு சட்டத்திற்கு முரணானது என தெரிவித்துள்ள  ஐக்கியதேசிய கட்சி எனினும் புதிய தேர்தல்களை எதிர்கொள்ள தயார் என குறிப்பிட்டுள்ளது

பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் நள்ளிரவில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ண இதனை தெரிவித்துள்ளார்.

ஐக்கியதேசிய கட்சியும் ஐக்கியதேசிய முன்னணியும் இணைந்து தேர்தலை எதிர்கொள்ளவுள்ளதாக ராஜிததெரிவித்துள்ளார்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டமை குறித்து தேர்தல் ஆணையகம்  உச்சநீதிமன்றத்தின் கருத்தை கோரும் என தகவல்கள் வெளியாகின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

ஜனாதிபதி முதலில் பிரதமரை பதவி நீக்கம் செய்து பாராளுமன்றத்தின் அமர்வுகளை இடைநிறுத்தும் அரசமைப்பிற்கு முரணான நடவடிக்கையை எடுத்தார் எனவும் முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிருபிப்பதற்கு அவசியமான  எண்ணிக்கை இல்லை என்பது தெரிந்தவுடன் சிறிசேன இரண்டாவது சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டார் என ராஜித சேனாரட்ண குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment