அகிம்சைபேசும் போலிமனிதர்களை நம்பி திலீபனை பலிகொடுத்தது ஈழத்தமிழினம்

358 0

thillepan_8இந்த உலகத்தில் எத்தனையோ தியாகிகள் தோன்றியிருக்கலாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோரிக்கைகளுக்காக எதை எதை எல்லாமோ தியாகம் செய்திருக்கலாம் ஆனால் தனது சமூகத்திற்காக தனது இனத்தின் விடிவுக்காக உயிரையே தியாகம் செய்தவர்கள் ஒரு சிலர்மட்டுமே. அப்படிப்பட்ட தியாகங்க்களை உலகம் என்றும் போற்றி நிற்கின்றது. ஆனால் ஈழ நாட்டிலே தனது இனத்தின் விடுதலைக்கு தன் உயிரை தியாகம் செய்த ஒரு இளைஞனை ஏன் இந்த உலகம் கண்டுகொள்ளவில்லை.

உலக வரலாற்றிலே போற்றப்பட வேண்டிய திலீபனின் தியாகம் பயங்கரவாதம் என்று நோக்கப்படுவது வேடிக்கையோடு வேதனையான ஒன்று. சரி யார் இந்த திலீபன் எதற்காக இவன் தன் உயிரையே தியாகம் செய்தான் என்பதை இன்றைய இளையசமுதாயம் அறிந்திருக்குமா என்பது சந்தேகமே எனவே அவர்களுக்காக அந்த தியாக தீபத்தின் சிறப்பினை இங்கே தெளிவுபடுத்த வேண்டும். யாழ்ப்பாணம் ஊரெழுவிலே பிறந்த இவரது பெயர் இராசையா பார்த்தீபன் கார்த்திகை 27.1963 இல் பிறந்த பார்த்தீபன் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆரம்ப கால முக்கிய உறுப்பினராக செயற்பட்டவர் யாழ்மாவட்ட அரசியல் துறைபொறுப்பாளராக செயற்பட்டவர்.

1987 புரட்டாதி 15ம் திகதி ஜந்து அம்சககோரிக்கையினை இந்திய ஆக்கிரமிப்பு படைகளிடம் அவர்கள் கூறும் காந்தியின் வழியிலே நீரும் அருந்தா உண்ணா விரதம் இருந்து தனது உயிரையே தியாகம் செய்தவர். அகிம்சை ரீதியான போராட்டங்களில் துளி அளவு நம்பிக்கை கூட இல்லாது. ஈழதமிழர்களை ஆயுத பிரியர்களாக மாற்றியதோடு மட்டும் அல்லாது இந்திய வல்லாதிக்க இராணுவத்திற்கெதிராக தமிழர்களை கள முனை நோக்கி நகர்த்தியதும் இந்த திலீபனின் இழப்பே. தனது வாழ்விலே எந்த ஒரு சந்தோசத்தையும் அனுபவிக்காத வெறும் இருபத்து நான்கு வயதான அந்த இளம் தளிர் பட்டினியால் கருகிப்போனதை எளிதில் மறக்குமா.

தமிழினம் எனவேதான் அதற்கான பல விளைவுகளை இந்திய வல்லாதிக்க இராணுவம் சந்திக்க நேர்ந்தது. அமைதிப்படை என்ற பெயரிலே தமிழர் தாயகங்களை ஆக்கிரமிப்பு செய்த இந்தியாவின் கொடிய இரணுவம் இன்றுவரை மறந்திருக்காது ஈழ மண்ணிலே ஒரு சிறிய போராட்ட குழுவிடம் வாங்கிய அடிகளை அகிம்சையின் ஆசனமாக விளங்கும் இந்தியா ஈழ தமிழர்களுக்கு இழைத்த அநீதிகள் ஏராளம் ஒராயிரம் சகுனியாகவும் பல்லாயிரம் கூனியாகவும் ஈழத்தமிர் விடையத்தில் செயற்பட்டு தமிழினத்தின் இன விடுதலை போராட்டத்தை அழித்தொழித்த பெருமை இந்த இந்தியாவையே சாரும்.

இது போலவே இந்த தியாக தீபத்தின் இழப்பிற்கும் இந்தியாவே முழு பொறுப்பும். சுருக்கமாக கூற போனால் திலீபனை இந்திய கொலை செய்தது என்றே கூறலாம். அவனது நியாயமான கோரிக்கைகளை இந்தியா நிறைவேற்றி இருந்தால் வாழ வேண்டிய அந்த இளம்தளிர் பட்டினித்தீயிலே பொசிங்கியிருக்காது அப்படி அவன் எதை கேட்டான். அவனது ஜந்து கோரிக்கைகளை அன்று நிறைவேற்ற முடியாத காரணம் என்ன?

மீள குடியேற்றம் என்ற பெயரிலே வடக்கு கிழக்கில் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்க்கள் நிறுத்தப்பட வேண்டும்.* அவசரகால சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.* ஊர்காவல்படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்க்கள் முற்றாக களையப்பட வேண்டும்.

தமிழர் பிரதேசங்க்களில் புதிதாக பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற ஜந்து கோரிக்கையே ஆகும். ஆனால் இன்றுவரை அந்த தியாக திலீபன் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. காந்திய தேசத்திடம் காந்திய வழியிலே போராடி தோற்றுப்போனது திலீபனது அகிம்சை இதற்காக இந்தியா இது வரை சிறு வருத்தமோ ஆதங்கமோ காட்டிக்கொள்ளவில்லை மாறாக அவனை தீவிரவாதியாகவும் வன்முறையாளனாகவுமே சித்தரிக்கின்றது.

ஈழத்தமிழர்களின் வரலாற்றிலே ஒரு பாரிய சோகத்தினையும் ஈழவிடுதலைப்போராட்டத்தின் பேரெழுர்ச்சிக்கும் முக்கியமான ஒரு காரனியாகவும் அமைந்தது தீலீபனின் இழப்பு அகிம்சைரீதியாக போராடினால் உரிமைகளை பெற்றுக்கொள்ளலாம் என்றும் உலகத்தில் அகிம்சைதான் சிறந்த ஒரு ஆயுதம் என்றும் வரையப்பட்ட வசனம் நல்லூரான் வீதியிலே பொய்யாகிப்போனது உணவின்றி நீரின்றி வாடிப்போன அந்த இளைஞனை உலகத்தி அகிம்சையினைபோதிக்கும்எந்தஆசானும்கண்டுகொள்ளவில்லை அனுகுண்டையும் ஆட்லறியையும்கைகளில்வைத்துக்கொண்டுஅகிம்சைபேசும்ஆசாமிகளும் காந்தியதேசம் என்றும் புத்தன் பிறந்த பூமி என்றும் புனிதம் பேசும் இந்தியாவும் பார்த்துக்கொண்டிருக்க பறிக்கப்பட்டது எங்கள் பார்தீபனின் உயிர் எல்லோரும் இன்புற்றிருப்பதை தவிர வேறென்றும் அறியேன் என்ற தமிழனின் பிள்ளை பட்டினித்தீயிலே கருகிப்போனது
ஒரு இனத்தின் விடியலுக்காக அந்த இனத்தின் விடுதலைக்காக தன் உயிரையே தியாகம் செய்யும் அளவிற்கு இன்றய நவீன உலகில் மனிதர்கள் யாரும்இல்லை .

இங்கே மனிதர்கள் என்று கூறும் அளவுக்கு யாரும் மனிதர்களாக வாழவில்லை அவசர உலகின் நின்றுவிடாத இயந்திரங்களாகவும் பிணம் தின்னும் கழுகுகளாகவும் நக்கிப்பிழைக்கும் நாய்களாகவும் பணத்துக்கும் பதவிக்கும் பகட்டு வாழ்கைக்கும் தன்மானத்தையும் தனித்துவத்தினையும் அடகுவைக்கும் மனிதர்கள் அதிகமாக வாழும் இந்த பூமியில் திலீபன்.பிறந்தான் வாழ்ந்தான் இன்னும் இந்த மண்ணிலே வாழ்ந்துகொண்டிருக்கின்றான்என்பது பெருமிதமான விடயம் இளமையும் துடிப்பும் மிக்க அந்த இளைஞனுக்கு எப்படி இவளவு தியாக உணர்வும் அகிம்சைமீது விருப்பும் சாகும் வரையிலும் அதன்மீது தளராத நம்பிக்கையும் வந்தது என்பது ஆச்சரியமே ஆனால் அந்த அகிம்சையே அவனுக்கு எமனாகியது என்பது இந்த உலகின் போலி முகத்தினை தெளிவுபடுத்துவதேயாகும் திலீபன் அப்படி எதைகேட்டான்திலீபனின் கோரிக்கைகள்தான் என்ன ? மனிதகுலத்துக்கே ஒவ்வாத ஒன்றைக்கேட்டானா? அவன்கேட்டது நியாயமானது அவனது கோரிக்கைகள் அத்தனையும் சிங்கள இனவாதபூதங்களால் அழிக்கப்பட்டுக்கொண்டிருந்த தமிழ்மக்களின் விடுதலைக்கானது தனது இனம் இன்னொரு இனத்தினால் அழிக்கப்பட்டு சித்திரவதைப்படுவதை கண்டு அவர்களின் விடியலுக்காக ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து அதனை ஏற்றுக்கொள்ளும்வரையும் உணவின்றி நீரின்றி அந்த நல்லூரான் வீதியிலே பட்டினியால் துடித்து உயிர்விட்டான் அந்த உத்தமன்.

வன்முறைவேண்டாம் ஆயுதக்கலாசாரம் வேண்டாம் எங்கும் அமைதி அமைதி என்று பகட்டுவித்தை காட்டும் மனிதர்கள் அன்று அகிம்சைரீதியாக தன் இனத்திற்கு நீதிகேட்டு தவம் இருந்த திலீபனை கண்டுகொள்வில்லை காரணம் என்ன? ஆடைகளுக்குள் ஆயுதங்களை மறைத்துவைத்து அகிம்சைபேசும் போலிமனிதர்களை நம்பி திலீபனை  பலிகொடுத்தது ஈழத்தமிழினம்

இந்திய தேசம் மகாத்மா என்றும் அழைக்கப்படும் (மோகந்தாசு கரசந்தகாந்தி) உலகலாவியரீதியிலே மாபெரும் சகிம்சாவாதியாக போற்றப்படுகின்றஅவர் அப்படி எதை செய்தார். தனது பதின்மூன்று வயதிலே கஸ்துரி எனும் பெண்னை திருமணம் செய்கின்றார். நான்கு ஆண்பிள்ளைகளை பெற்றெடுத்தார். வாழ்க்கையில் அனைத்து இன்பங்களையும் அனுபவித்த ஒருவராகவே அவர் ஆங்கிலேயருக்கு எதிராக உண்ணா நோன்பிருந்தார் . ஆனல் வாழ்க்கையில் எந்த இன்பங்ககளையும் அனுபவிக்காத வெறும் இருபத்து நான்கு வயதான ஒரு இளைஞன் நீர் கூட அருந்தாமல் பன்னிரண்டு நாட்கள் தன்னைத்தானே வதைக்கின்ற அளவு தியாக உணர்வும் தேசப்பற்றும் எவ்வாறு உருவாகியது உலகத்தில் ஒன்றை இழந்தால்தான் இன்னனொன்றை பெறலாம்.

ஆனால் தன்னையே இழக்கின்ற அழவு தியாகத்தினை எவராலும் செய்யமுடியாது. அப்படி ஒரு மிகப்பெரிய தியாகத்தை செய்த தியாக திலீபனின் தியாகம் உலகத்தின் அத்தனை தியாகங்களையும் விட பெரியது பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிது. இந்த நூற்றாண்டின் அகிம்சாவாதியாக சமாதானத்தின் தந்தையாக போற்றப்படும் நெல்சன் மண்டேலா இருபத்தேழு ஆண்டுகள் சிறையிலே தனது வாழ் நாட்களை தியாகம் செய்திருந்தார். அவரது எண்ணம் நிறைவேறியிருந்தது. ஆனால் திலீபனின் கோரிக்கைகள் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. அவனது தியாகத்துக்கான பலன் கிடைக்கவில்லையே? நெல்சன் மண்டேலா சிறையில் இருக்கும் போதே இந்திய அரசு நேரு சமாதான விருதினை வழங்கியது. 1990ல் பாரதரத்னா விருதினை வழங்கியது. ஆனால் தனது வஞ்சகத்தால் கொலை செய்யப்பட்ட திலீபனின் தியாகத்தினை அது மறந்துவிட்டது அதற்காக இந்தியதேசன் சிறு வருத்தம் தெரிவிக்கவும் தயாராக இல்லை.

உலகின் முன்னே போற்றப்படவேண்டிய ஒரு அகிம்சாவாதியின் தியாகம் பயங்கரவாதம் என்ற போர்வையினால் மறைக்கப்பட்டுள்ளது ஈழ விடுதலைப் போராட்டத்தில் திலீபனால் விதைக்கப்பட்ட அகிம்சாவாதம் அவனது மரணத்தோடு மரணித்திப் போகின்றது. அகிம்சைக்கே ஆசானாக அடையாளமிடும் இந்தியாவிடமே தோற்றுப்போனது. திலீபனது அகிம்சை அந்த உன்னதனாம தியாக தீபம் இந்த வன்முறையான உலகை விட்டு நீங்கி இருபத்தொன்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் அவனது கோரிக்கைகள் இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை நாடுவிட்டு நாடு வந்து எங்கள் உறவுகளை கொன்றுகுவித்த இந்திய வல்லாதிக்க இரானுவத்தினருக்கு பலாலியில் நினைவுத்தூபி அமைத்து மாலையிட்டு மரியாதை செய்யும் சிங்களப்போரினவாதம் நல்லூர் வீதியிலே அமைக்கப்பட்ட திலீபனின் நினைவாலயத்தினைக்கூட விட்டுவைக்கவில்லை அங்கே அழிக்கப்பட்டது அவனது நினைவாலையம் அல்ல அகிம்சைக்கான அடையாளம் என்பதை பேரினவாதம் புரிந்துகொள்ளவில்லை

அகைம்சை ரீதியாகப்போராடி உயிர்நீத்த ஒருவனை பயங்கரவாதி என்று ஒதுக்கி வைப்பது அநீதி எம் இனத்தின் விடியலுக்காகவும் விடுதலைக்காகவும் போராடிய பல்லாயிரம் வீரர்கள் பிறந்த இந்த மண்ணிலே விடுதலைக்கு வித்தாகி விழ்ந்த உடல்கள் எத்தனை எப்படி எல்லாம் போராடமுடியுமோ அப்படி எல்லாம் போராடிவிட்டோம் ஆனால் நீதியும் நியாயமும் எமக்கு கிடைப்பதாக இல்லை இனியும் என்னசெய்யப்போகின்றோம் ஒட்டுமொத்த தமிழினமும் அடிமைப்பட ஒரு சமூகமாக சாகப்போகின்றோமா அல்லது சரித்திரம் ஒன்றை மாற்றி எழுதப்புறப்படப்போகின்றோமா?மரணப்படுக்கையிலே திலீபன் சொன்னதுபோல மக்கள் புரட்சி ஒன்று வெடிக்கட்டும் ஒன்றுபட்ட தமிழ்ச்சமூகத்தின் குரல் ஓங்கிஒலிக்காவிடின் ஒட்டுமொத்ததமிழினத்தின் குரல்வளையினை சிங்களப்போரினவாதம் நசுக்கிவிடும் சுயநலமற்ற மனிதர்களாக மண்ணிலே வாழும்வரை சுயமரியாதையுடன் வாழ சுதந்திரக்காற்றினை சுவாசிக்க எல்லோரும் ஒன்றுபடுவோம் தீயாக தீபத்தின் அந்த ஒப்பற்ற வீரனின் நினைவினை சுமந்து நிற்கும் இந்த நாளிலே அவன் கோரிக்கைகளை நிறைவேற்றி அஞ்சலி செலுத்துவோம்.

ஆதி