பாராளுமன்றத்தைக் கலைப்பதே ஒரே தீர்வு – கம்மம்பில

217 0

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட பிரதமரை ஏற்றுக்கொள்ள முடியாது என சபாநாயகரினால் விடுக்கப்பட்ட எழுத்து மூல அறிவிப்பு பாராளுமன்றத்தைக் கலைப்பதற்குத் தேவையான நெருக்கடி நிலையொன்றை உருவாக்கியுள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மம்பில தெரிவித்துள்ளார்.

இதனால், ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அதிகாரத்தைப் பயன்படுத்தி பாராளுமன்றத்தைக் கலைத்து அதிகாரமுள்ள, மக்கள் ஆதவைப் பெற்ற ஒரு பிரதமரை தெரிவு செய்து கொள்வதே தற்போதைய அரசியல் நெருக்கடிக்கான சிறந்த தீர்வாகும் எனவும் கம்மம்பில எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இரு பிரதமர் என்ற நிலைமைக்கு முற்றுப் புள்ளி வைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.

பிவிதுரு ஹெல உறுமய கட்சிக் காரியாலயத்தில் இன்று (9) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

Leave a comment