ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சியை கைப்பற்றுவோம்!

237 0

சபாநாயகரின் அதிகாரத்தின் கீழ் எதிர்வரும் 14 ஆம் திகதி கூடப்படவுள்ள பாராளுமன்றில் யார் எந்த குழறுபடிகளை மேற்கொள்ள நினைத்தாலும் அதற்கிடமளியாது 121 என்ற எமது பெரும்பான்மையை நிரூபித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சியை கைப்பற்றுவோம் என தெரிவிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர மக்கள் ஆணையை மீறி செயற்படும் ஜனாதிபதி உயர் நீதிமன்றுக்கு மட்டுமல்ல மக்கள் நீதிமன்றுக்கும் பதில் கூற வேண்டிவரும் என்றார்.

 

அரசியலமைப்பை மீறி பிரதமரொருவரை நியமித்துள்ள ஜனாதிபதி மீண்டும் பாராளுமன்றை கலைக்க நீதிமன்றை நாடுவது மீண்டும் ஒருமுறை பாராளுமன்றையும் அரசியலமைப்பையும் மீறி சட்டத்துக்கு முரணாக அவர் செயற்பட எத்தனிப்பதை காட்டுகிறது என குறிப்பிட்டதோடு, பெரும்பான்மையை நிரூபித்து வெற்றிகரமாக ஆட்சிக்கு வருகையில் அரசியலமைப்புக்கு எதிராக செயற்பட்ட அனைவருக்கும் தண்டனைகள் உண்டு எனவும் எச்சரித்தார்.

அரசியலமைப்புக்கு எதிராக ஜனாதிபதி மீண்டும் பாராளுமன்றை கலைக்க திட்டம் தீட்டியுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று ஐ.தே.க.வினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எதிர்ப்பு வாகனப் பேரணியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் அங்கு உரையாற்றுகையில்,

மக்களாணையை ஜனாதிபதி சரியாக புரிந்துகொள்ளவில்லை. ஜனாதிபதியாக அவரை நியமிக்க கடமையை விடுத்து அவர் வேறு பாதையில் பயணித்துக் கொண்டுள்ளார். ஆனாலும் மக்களுடன் கரம் கோர்த்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சியை கைப்பற்றுவோம்.

சட்டத்துக்கு முரணாக பறிக்கப்பட்ட பிரதமர் பதவியை மீண்டும் அரசியலமைப்புக்குட்பட்டு பெற்றுக் கொள்வதோடு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அக்கதிரையில் அமரவைத்தே நாம் போராட்டத்தை நிறைவு செய்வோம் என்றார்.

Leave a comment