புதையல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது

314 0

ஶ்ரீபுர, சீவலிபுர பகுதியில் தொல்பொருட்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் புதையல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஶ்ரீபுர பொலிஸாரிற்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து புதையல் அகழ்விற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும், பூஜை பொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர்கள் பராக்ரமபுர, பொல்பித்திகம, பன்னல ராகம மற்றும் பொலன்னறுவை ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment