பராக்கிரம சமுத்திரத்தின் வான் கதவுகள் அனைத்தும் திறப்பு

492 0
பராக்கிரம சமுத்திரத்தின் வான் கதவுகள் அனைத்தும் இன்று (05) காலை திறந்து விடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக பெய்துவரும் மழையின் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலன்னறுவை வலயத்துக்கான நீர்ப்பாசன அலுவலகம் தெரிவித்துள்ளது.

10 வான் கதவுகள் 1 அடி அளவில் திறந்துவிடப்பட்டுள்ளன. இதிலிருந்து நொடிக்கு 1 400 கன அடி நீர் ஒரு வான் கதவிலிருந்து வெளியேற்றப்படுகிறது.

அதனால் அம்பன் கங்கையின் நீர் மட்டம் அதிகரிக்கக் கூடும் கங்கையை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் கேட்டுக்கொள்வதாகவும் நீர்ப்பாசன அலுவலகம் அறிவித்துள்ளது.

Leave a comment