கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் கொலை

306 0
சிலாபம், சிப்பிகலான பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் மற்றுமொருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி உள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று (04) இரவு 10 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிலாபம், முகுணுவட்டவன பகுதியை சேர்ந்த 22 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலை மேற்கொண்ட நபரும் தாக்குதலுக்கு உள்ளான நபரின் தந்தையும் நேற்று இரவு மது அருந்திக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் காரணமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment