சிறுபான்மை கட்சிகள் ஒன்றாக பயணிப்பது காலத்தின் தேவையாகும் – இம்ரான்

302 0

இன்று ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்குள் சிறுபான்மை கட்சிகள் ஒரே அணியில் பயனிப்பது காலத்தின் தேவையாகும் என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

இன்று அலரிமாளிகையில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

பெரும்பான்மை இனவாத சக்திகள் இணைந்து மேற்கொண்ட சதியின் மூலமாகவே பாராளுமன்ற உயருப்பினர் மஹிந்த ராஜபக்ச அரசியலமைப்புக்கு முரணாக பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆகவே இவர் பிரதமராக நீடித்து ஆட்சியை மேற்கொண்டால் சிறுபான்மை சமூகம் எதிர்நோக்க நேரிடும் இன்னல்களை கருத்தில் கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக வாக்களிப்பதுக்கு எடுத்த தீர்மானத்தை வரவேற்கிறேன் .

அத்துடன் இந்த எதார்த்த நிலையையும் கடந்த மஹிந்த ஆட்சியிலும் நல்லாட்சியிலும் தமக்கு வழங்கப்பட்ட சலுகைகளையும் ஆராய்ந்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் தொடர்ந்தும் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து செயற்படுவார்கள் என நம்புகிறேன்.

இவ்வாறு தமிழ்தேசிய கூட்டமைப்பு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி போன்ற சிறுபான்மை கட்சிகள் ஒரே பாதையில் பயணித்து ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கம் ஒன்றை அமைக்குமிடத்து பெரும்பான்மை இனவாத சக்திகளால் சூழ்ந்துள்ள மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியை போல் அல்லாமல் எமது தேவைகளை இலகுவாக நிறைவேற்றிக்கொள்ளளாம் என தெரிவித்தார்.

Leave a comment