சென்னை ஐகோர்ட்டின், நிரந்தர நீதிபதிகளாக பதவி ஏற்பு

255 0

ஆர்.எம்.டி.டீக்காராமன், என்.சதீஷ்குமார், என்.சேஷசாயி ஆகியோர் ஐகோர்ட்டு நிரந்தர நீதிபதிகளாக பதவி ஏற்பு நடைபெற்றது.

சென்னை ஐகோர்ட்டின், கூடுதல் நீதிபதியாக ஆர்.எம்.டி.டீக்காராமன், என்.சதீஷ்குமார், என்.சேஷசாயி ஆகியோரை நியமித்து கடந்த 2016-ம் ஆண்டு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதன்படி, அவர்கள் 3 பேரும் அதே ஆண்டு நவம்பர் 16-ந்தேதி கூடுதல் நீதிபதிகளாக பதவி ஏற்றுக்கொண்டனர்.

இந்த நிலையில், இவர்கள் 3 பேரையும் ஐகோர்ட்டு நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான மூத்த நீதிபதிகள் குழு பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டு, 3 பேரையும் நிரந்தர நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின்படி, நீதிபதிகள் ஆர்.எம்.டி.டீக்காராமன், என்.சதீஷ்குமார், என்.சேஷசாயி ஆகிய 3 பேரும் நிரந்தர நீதிபதிகளாக நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு ஐகோர்ட்டு தலைமை நீதிபதி வி.கே.தஹிலரமானி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சி, தலைமை நீதிபதி சேம்பரில் வைத்து நடந்தது. இதில், ஐகோர்ட்டு மூத்த நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், எஸ்.மணிக்குமார், கே.கே.சசிதரன், ஆர்.சுப்பையா உள்பட பல நீதிபதிகளும், அட்வகேட் ஜெனரல் உள்ளிட்ட அரசு தரப்பு வக்கீல்கள், வக்கீல் சங்கங்களின் நிர்வாகிகள் என்று பலர் கலந்துகொண்டனர்.

Leave a comment