ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தல்கள் அனைத்து சட்டத்துக்கு முரணாது -unp

4539 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தராஜபக்ஷவை பிரதமராக அறிவித்தது முதல் அதன்பின்னர் அவர் வழங்கிய அனைத்து அமைச்சு பதவிகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாதுஎன்றும் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தல்கள் அனைத்து சட்டத்துக்கு முரணாது எனவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 118 பேர் சபாநாயகர் கருஜயசூரியவுக்கு அறிவித்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது.

ஜனாதிபதி அறிவித்தாலோ, அறிவிக்காவிட்டாலோ, சபாநாயகர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி பாராளுமன்றத்தை கூட்டுமாறு சகல கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.

அரசியல்கட்சி தலைவர்களுமக்கும் சபாநாயகர் கருஜயசூரியவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை பாராளுமன்ற கட்டித்தொகுதியில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் ஐக்கிய தேசிய முன்னணியின் உறுப்பினர்களுட்பட மக்கள் விடுதலை முன்னனி, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பிளர்கள் பலர் கலந்துக்கொண்டிருந்ததுடன் ஜனாதிபதியின் செயற்பாடுகள் சட்டத்துக்கு முரணானது என்பதற்கு தெளிவான பதில் கிடைக்பெற்றுள்ளதாகவும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷன ராஜக்கருனா  சுட்டிக்காட்டடினார்.

சபாநாயகருக்கும் அரசியல் கட்சிதலைவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல்கள் முடிவுடைந்தவுடன், இன்று அலரிமாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்தக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை சுட்டிகாட்டினார்.

Leave a comment