லொறி மின் கம்பத்துடன் மோதி விபத்து

246 0

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குபட்பட்ட மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் முன்னால் இன்று அதிகாலை விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கி பணித்த மீன் ஏற்றும் சிறு ரக லொறியொன்று பிரதேச செயலகத்தின் முன்னாள் உள்ள மின் கம்பத்துடன் மோதியமையினாலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

இதனால் அந்த மின்கம்பம் உடைந்து சேதமடைந்துள்ளதுடன், வாகனத்தின் மேற் பகுதியும் முற்றாக சேதமடைந்துள்ளது.

வாகனத்தில் பயணித்த சாரதியும், உதவியாளரும் காயங்களுக்குள்ளான நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் இச் சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment