எந்தவொரு தனி நபருக்கும் நாம் ஆதரவில்லை – ஜே.வி.பி

228 0

எந்தவொரு தனி நபருக்கும் மக்கள் விடுதலை முன்னணி ஆதரவு வழங்காது என அந்தக் கட்சியின் ஊடகப் பேச்சாளர், பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று காலை பாராளுமன்றில் நடைபெற்ற கூட்டத்தை மைய்யமாக வைத்து மக்கள் விடுதலை முன்னணி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதாக வந்தந்திகள் பரப்பப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை பாராளுமன்றத்தை கூட்டுவதற்கே மக்கள் விடுதலை முன்னணி தனது ஆதரவுவை தெரிவித்துள்ளதாக விஜித ஹேரத் மேலும் குறிப்பிட்டார். (

Leave a comment