நாட்டினுள் சர்வதேசத்தின் தலையீடு இருக்கக்கூடாது -சரத் வீரசேகர

235 0

நல்லாட்சி அரசாங்கம் உடைந்து, புதிய பிரதமர் நியமிக்கப்பட்டமை தொடர்பில் இராணுவத்தில் பணியாற்றியவன் என்ற வகையில் மகிழ்ச்சியடைகின்றேன்.

மூன்று தசாப்தகால யுத்தத்தினை முடிவிற்குக் கொண்டுவந்த இராணுவத்தினரை சர்வதேசத்திடம் காட்டிக்கொடுத்ததுடன், அவர்களை சிறையில் அடைத்துவிட்டு சிறுபான்மை தமிழ் கட்சிகளின் விருப்பத்தின்படி புதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டைப் பிரிப்பதற்கு முயற்சித்தவர்கள். பதவி நீக்கப்பட்டமை சிறந்ததொரு முடிவாகும் என இராணுவத்தின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுவதற்கு தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தினால் இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

எமது நாடு சுதந்திரமடைந்து, சுயாதீனமாக செயற்படும் நாடாகும். இலங்கை இன்னமும் பிரித்தானியாவின் காலனித்துவ நாடு எனக் கருதிக் கொண்டிருக்கின்றார்கள்.

நாட்டிற்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினையை நாமே தீர்த்துக்கொள்ள வேண்டும். இவ்விடயத்தில் சர்வதேசத்தின் தலையீடு இருக்கக்கூடாது. தற்போதைய வெளிவிவகார அமைச்சர் சரத் அமுனுகம இவ்விடயம் தொடர்பில் வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்றார்.

Leave a comment