இனிமேல் மக்கள் மீது எல்லையற்ற வரிகள் இல்லை- மஹிந்த

245 0

பிராந்தியத்தில் துரித வேகமாக வெற்றியை பெற்றுக்கொண்ட நாடாக இலங்கையை மாற்றி, நாட்டின் சகல இன மக்களுக்கும் ஒரேவிதமாக நன்மைகளைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதே தனது இலக்கு என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் தோன்றியிருப்பதாக சர்வதேச ரீதியில் காண்பிக்க சிலர் முயன்றாலும் நாட்டுக்குள் எந்த நெருக்கடி நிலையும் கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.

மக்கள் மீது எல்லையற்ற வரிகளை விதித்த காலத்தை முடிவுக்குக்கொண்டு வருவதே தமது எதிர்பார்ப்பு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதி மற்றும் பொருளாதாரத் துறை அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் நேற்று(31) தமது அமைச்சு அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்றார். இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment