ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அழைப்பு- சம்பிக்க

663 28

பரந்த ஜனநாயக அரசாங்கம் ஒன்றை கட்டியெழுப்ப மீண்டும் ஒன்றிணையுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அழைப்பு விடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க கூறுகிறார்.

காணப்பட்ட குறைபாடுகளை திருத்திக் கொண்டு முன்னோக்கிச் செல்வதற்கு ஐக்கிய தேசிய கட்சி தயார் என்று அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இந்தக் கருத்தைக் கூறினார்.

எதிர்வரும் வௌ்ளிக்கிழமை பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக இந்த ஊடக சந்திப்பில் பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கூறினார்.

Leave a comment