பிரதமர் அலுவலக ஊழியர்களுக்கு இடமாற்றம்

28388 129

பிரதமர் அலுவலகத்தில் சேவையில் ஈடுபட்டிருந்த ஊழியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அரச தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் நிரந்தர நியமனம் வழங்கப்படாத ஊழியர்கள் சேவைக்கு சமூகமளிக்க வேண்டாம் என உயர் அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அலரி மாளிகையில் சேவையில் இருந்த ஊழியர்கள் பலர் தற்போது அரச நிர்வாக அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சாரதிகள் இருவரும் தொகைமதிப்பு புள்ளிவிபரவியல் திணைக்களத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a comment