கொழும்பில் இன்று இடம்பெற்ற ஐக்கியதேசிய கட்சியின் பாரிய பேரணியில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் சர்ச்சைக்குரிய அமைச்சர் மேர்வின் சில்வாவும் இணைந்துகொண்டுள்ளார்.
ஐக்கியதேசிய கட்சி தலைவர்கள் உரையாற்றிய மேடையில் மேர்வின் சிவ்லா காணப்பட்டார்
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் ஊடக நிறுவனங்கள் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களை முன்னெடுத்தார் என குற்றம்சாட்டப்பட்டவர் மேர்வின் சில்வா.எனினும் கடந்த சில வருடங்களாக இவர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கடுமையாக குற்றம்சாட்டி வந்துள்ளார். வெள்ளை வான் கடத்தல்கள் ஆட்கள் காணமல்போகச்செய்யப்படுதல் ஆகியவற்றின் முக்கிய சூத்திரதாரி என கோத்தபாய ராஜபக்ச மீது குற்றம்சாட்டியுள்ளார்.

