பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு 125 பேருக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சபாநாயகர் இன்று ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “நாட்டிலுள்ள அரசியல் நெருக்கடி நிலைமையை நீக்க உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக” தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி, இலங்கை தமிழரசுக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஆகிய இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
நாட்டை ஆட்சி செய்ய எந்த தரப்பினருக்கு பெருமான்மை பலம் காணப்படுவது என்பதை நிரூபிக்க பாராளுமன்றம் உடனடியாக கூட்டப்பட்ட வேண்டும் என சபாநாயகர் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

