சென்னையில் காலை முதல் கனமழை பெய்து வருகிறது

245 0

வடகிழக்கு பருவமழை தொடங்கவிருக்கும் நிலையில், சென்னையில் காலை முதல் மழை பெய்து வருகிறது.

தமிழகம் மற்றும் புதுவையில் தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்ததையடுத்து, வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.
ஆனால், பருவமழை தொடங்குவதற்கான சூழல் தென்படவில்லை. அதேசமயம் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று காலை முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், எழும்பூர், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை முதலே மழை பெய்து வருகிறது. மழை காரணமாக ஆங்காங்கே சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
இதற்கிடையே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவம்பர் 1-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a comment