பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ரணிலே நாட்டின் பிரதமர்-சாகல

316 0

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கையை வெற்றிகொண்ட நபர் உறுதிப்படுத்தப்படும்வரை ரணில் விக்ரமசிங்கவே நாட்டின் பிரதமர். அதனால் அவரின் பாதுகாப்பை குறைக்காமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாகல ரத்நாயக்க பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பை குறைக்குமாறு பொலிஸ்மா அதிபரினால் கட்டளையிட்டு, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஊடாக, பிரதமர் பாதுகாப்பு பிரிவுக்கு  அனுப்பிவைத்துள்ள கடிதத்துக்கு பதிலளிக்கும்வகையிலேயே சாகல ரத்நாயக்கவினால்  பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எமதுகோரிக்கை ஜனநாயகமிக்கது என தெரிவித்து, சபாநாயகரினால் கடந்த 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அது தொடர்பில் கடிதம் அனுப்பிவைத்துள்ளார்.

அதனால் பாராளுமன்ற வரப்பிரசாதம் மற்றும் அரசியலமைப்பு ஏற்பாடுகளுக்கமைய இதுதொடர்பான தீர்வு வழங்கப்படும்வரை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பை குறைக்காமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன் இதுதொடர்பாக சபாநாயகர் கருஜயசூரிய மற்றும் கட்சித்தலைவர்களுடன் கலந்துரையாடியதன் பின்னர் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

Leave a comment