பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதனூடாக நாட்டில் அசாதாரணமான சூழ்நிலை ஏற்படுவதற்கு இடமளிக்க வேண்டாம்

10123 43

பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதனூடாக நாட்டில் அசாதாரணமான சூழ்நிலை ஏற்படுவதற்கு இடமளிக்க வேண்டாம் என சபாநாயகர் கருஜயசூரிய ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றப் பிரேரணையை கொண்டு வருவதற்கு ஐக்கிய தேசியக் முன்னணியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தீர்மானித்துள்ளனர்.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினை உறுதிப்படுத்தவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை தொடர்ந்தும் பதவியில் வைத்திருப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் பாராளுமன்றத்தை அவசரமாக கூட்டுவதற்கான சந்தர்ப்பத்தினை தடுக்கும் வகையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதிக்கு பாராளுமன்றத்தை ஒத்தி வைக்க ஜனாதிபதி முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment