ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பே ஆதரவுக்கு காரணம் ; ஆறுமுகன் தொண்டமான்

263 0

மலையக தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் உறுதி அளித்ததனாலேயே தான் ஆதரவு வழங்கியுள்ளதாக  இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

 

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலயே இதனை குறிப்பிட்டுள்ளார்

இது குறித்து அவரது ஊடக அறிக்கையிலயில்  மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாகவது,

நாட்டில்  ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் காரணமாக புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவுசெய்யபட்ட செய்தியை அறிந்து புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு வாழ்த்து கூற சென்றிருந்த வேளை இந்த விடயத்தினை குறிப்பிட்டதாக ஆறுமுகன் தொண்டமான் மேலும் தெரிவித்தார்.

மலையக மக்கள் கடந்த இரண்டு வருடகாலமாக அடிப்படை சம்பளம் ஆயிரம் ரூபாவை கோரி வருகின்றனர் இந்நிலையில் மலையகத்தில் தற்பொழுது தோட்ட தொழிலாளர்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்து வருகின்ற நிலையில் இம் முறை தோட்ட  தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பள கோரிக்கையுடன்  நான்புதிய பிரதமரை வாழ்த்து கூற சென்றிருந்தேன் அப்போது  இம் முறை ஆறுமுகன் தொண்டமானுடைய பிரச்சினைக்கு முதல் தீர்வினை பெற்று கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார்.

இதேவேளை தோட்ட தொழிலாளர்களுடைய சம்பள விடயம் தொடர்பில் நாட்டின் ஜனாதிபதி மற்றும் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவோடு கலந்துரையாடியுள்ளதோடு எதிர் வரும் காலங்களில் ஜனாதிபதி மற்றும் புதிய பிரதமர் ஆகியோரின் கரங்களை பலபடுத்த இலங்கை தொழிலாளர் காங்ரஸ் செயற்படும் முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தினோம்

ஆனால் முதலாளிமார் சம்மேளனம் அடிப்படை சம்பளம் 600 ரூபா தருவதாக கோரியிருந்தனர் ஆனால் இம்முறை நிச்சயமாக தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தை பெற்று கொடுப்போம்.

அதற்கான புதிய வழிமுறைகளை பயன்படுத்தி பெற்று கொடுப்போம் அதன் காரணமாகத்தான் நாங்கள் இது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்று கொடுக்க கூடிய தலைவர்களை தேர்ந்தெடுத்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment