நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமை தொடர்பாக கவனம் செலுத்தியுள்ளேன்-கருஜய

303 0

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பான சட்ட ஆலோசனையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாக சபாநாயகர் கருஜயசூரிய அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமை தொடர்பாக கவனம் செலுத்தியுள்ளேன்.

இது தொடர்பான சட்ட ஆலோசனை பெற்றுக் கொள்வற்கான நடவடிக்கையயும் எடுத்துள்ளேன்.

அத்துடன் இது தொடர்பானதொரு விரிவானதொரு விளக்கத்தை நாளைய தினம் அறிவிப்பதாக சபாநாயகர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளமைகுறிப்பிடத்தக்கது.

Leave a comment