தேர்தல் குறித்து எதிர்வரும் வாரம் கலந்துரையாடல்

357 0

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையில் அடுத்த வாரமளவில் சந்திப்பு ஒன்று இடம்பெற உள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை மதியம் இந்த சந்திப்பு இடம்பெற உள்ளதாக தேர்தல்கள் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன,

இந்த சந்திப்பில் தேர்தல்கள் செயலகத்தின் அதிகாரிகளும் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மாத காலத்திற்குள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையில் இடம்பெறும் இரண்டாவது சந்திப்பு இது.

இதன்போது தற்போது ஆளுநர்களின் கட்டுப்பாட்டில் உள்ள மாகாண சபைகள் மற்றும் அவற்றுக்கான தேர்தலை விரைவில் நடத்துவது சம்பந்தமாக பேசப்பட உள்ளது.

Leave a comment