ஆட்டோ திடீரென்று தீப்பிடித்து முற்றாக எரிவடைந்தது!

343 0

ஏழாலை வடக்கு சிவகுரு கடையடியில் பயணித்துக் கொன்டிருந்த ஆட்டோ திடீரென்று தீப்பிடித்து முற்றாக எரிவடைந்துள்ளது.

இன்று (26) முற்பகல் வேளையில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், குறித்த ஆட்டோ ஏழாலை வடக்கு சிவகுரு கடையடியில் பயணித்துக் கொன்டிருந்த போது திடீரென்று தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

ஆட்டோவின் சாரதி கீழிறங்கி ஏனையவர்களின் உதவியுடன் தீயை அணைக்க முற்பட்டபோதும் ஆட்டோ முற்றாக எரிவடைந்துள்ளது.

Leave a comment