போதை மாத்திரைகளை கடத்தி வந்த பாகிஸ்தான் பிரஜைகள் இருவர் கைது!

320 0

ஹெரோயின் போதை மாத்திரைகளை வயிற்றில் விழுங்கிக் கொண்டு இலங்கைக்கு வந்த இரண்டு பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து போதைப் பொருள் தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பாகிஸ்தான் நாட்டு பிரஜைகள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், 350 கிராம் நிறையுடைய போதை மாத்திரைகளை இலங்கைக்கு கடத்தி வந்துள்ளனர்.

அவற்றின் பெறுமதி சுமார் 45 இலட்சம் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் தற்போது நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a comment