5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

332 0

நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. 

விக்டோரியா, ரன்டொபே, லஷபான உட்பட மத்திய மலைப்பகுதியில் உள்ள நீர்த்தேக்கங்களினதும், வடமத்திய மாகாணத்தில் உள்ள சில நீர்த்தேக்கங்களினதும் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

Leave a comment