தமிழ் கைதிகளின் விவகாரம் குறித்து அரசாங்கம் என்ற வகையில் நாம் துரிதமாக ஆராய வேண்டும்-ருவான்

312 0

தமிழ் கைதிகளின் விவகாரம் குறித்து அரசாங்கம் என்ற வகையில் நாம் துரிதமாக ஆராய வேண்டும்.  என இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று பாராளுமன்றத்தில் கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேலை பிரேரணையின் மீதான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

தமிழ் கைதிகளின் விவகாரம் குறித்து அரசாங்கம் என்ற வகையில் நாம் வழக்குகளை துரிதப்படுத்தி தீர்வுகள் குறித்து ஆராய வேண்டும்.

எனினும் ஜனாதிபதி -பிரதமர் இருவரும் இந்த விடயம் குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.  கடும் குற்றம் இளைத்தவர்கள் யார்? நிரபராதிகள் யார்? என ஆராய வேண்டும், இயலுமான வரையில் வழக்குகளை துரிதப்படுத்தி விடுதலை குறித்து ஆராய வேண்டும். இவர்கள் நீண்ட காலமாக சிறையில் வாடுகின்றனர் என நானும் ஏற்றுக் கொள்கின்றேன், யாரை விடுதலை செய்ய முடியுமோ அவர்களை விடுதலை செய்ய வேண்டு எனவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a comment