உடுவே தம்மாலோக தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

321 0
சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டிகளை தன்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் உடுவே தம்மாலோக தேரருக்கு எதிரான வழக்கில் இன்று பாதுகாப்பு சொற்பொழிவு முன்வைக்கும் நடவடிக்கை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் விஜேரத்ன முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது உடுவே தம்மாலோக தேரரின் சட்டத்தரணி பாதுகாப்பு சொற்பொழிவு முன்வைத்தார்.

அதன்படி உடுவே தம்மாலோக தேரருக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கும் விதம் சட்டத்திற்கு முரணானது என்று உடுவே தம்மாலோக தேரரின் சட்டத்தரணி இதன்போது மன்றில் தெரிவித்தார்.

இந்த வழக்கில் உடுவே தம்மாலோக தேரரை சிக்கவைப்பதற்காக பிரதியமைச்சர் வசந்த சேனாநாயக்க மற்றும் இரகசியப் பொலிஸார் திட்டமிட்டு செயல்பட்டுள்ளதாக உடுவே தம்மாலோக தேரரின் சட்டத்தரணி இதன்போது மன்றில் மேலும் தெரிவித்தார்.

இதனையடுத்து வழக்கின் மேலதிக பாதுகாப்பு சொற்பொழிவு முன்வைக்கும் நடவடிக்கை எதிர்வரும் மாதம் 19ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Leave a comment