மின்னல் தாக்கியதில் ஒருவர் பலி

313 0

மெதிரிகிரிய, கவுடுல்ல குளத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்த நால்வர் மீது மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹிங்குரான்கொட பகுதியை சேர்ந்த 25 வயதுடைய நுவன் குமார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அத்துடன் மின்னல் தாக்கியதில் 28 வயதுடைய ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மெதிரிகிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மெதிரிகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment