கனேமுல்ல, கடவத்தை வீதியின்பஸ் பணியாளர்கள் வேலை நிறுத்தம்

336 0

கனேமுல்ல, கடவத்தை வீதியின் 123ம் இலக்க பஸ் பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்துள்ளதாக  செய்தியாளர் கூறியுள்ளார்

இன்று (25) காலை முதல் அவர்கள் இவ்வாறு பணி நிறுத்தம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிவேக வீதியில் பயணிக்கும் நீர்கொழும்பு – கடவத்தை மார்க்கத்திலான பஸ்கள் குறிப்பிட்ட பஸ் தரிப்பிடங்களில் அல்லாமல் ஏனைய அனைத்து தரிப்பிடங்களிலும் நிறுத்தப்படுவதற்கு எதிராகவே இவர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்.

Leave a comment