சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் ஒரு தொகை மாணிக்ககற்களை கடத்திவர முற்பட்ட இலங்கையரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து போதைப்பொருள் ஒழிப்பு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரி தெரிவித்தார்.
பேருவளையைச் சேர்ந்த 25 வயதான வியாபாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இன்று காலை ருவாண்டாவிலிருந்து கட்டார் விமான மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்த போது குறித்த நபரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த விமான நிலைய சுங்க அதிகாரிகள் அவரை சோதனையிட்டபோது, குறித்த நபரின் மலவாயில் மறைத்து வைத்திருந்த ஒரு தொகை மாணிக்கக்கற்களை கைப்பற்றியுள்ளனர். சுமார் 4 இலட்சம் பெறுமதியான 329 கிராம் நிறைகொண்ட மாணிக்கக்கற்களை குறித்த நபரிடமிருந்து சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டரை மேலதிக விசாரணைகளுக்குட்படுத்தியுள்ளதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

