மன்­னார் முச­லிப் பிர­தே­சத்­தில் குளங்­கள் எது­வும் சீர­மைக்­கப்­ப­ட­வில்லை!

279 0

மன்­னார் முச­லிப் பிர­தே­சத்­தில் குளங்­கள் எது­வும் சீர­மைக்­கப்­ப­ட­வில்லை நீர்ப்­பா­ச­னத் திணைக்­க­ளத்­தின் அச­மந்­தப் போக்­கி­னால் மழை­நீர் சேமிக்­கப்­ப­டா­மல் கட­லில் கலக்­கின்­றது என முச­லிப் பிர­தேச சபை தவி­சா­ளர் சுபி­கான் குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளார் .

மன்­னார் மாவட்­டம் கடந்த பத்து மாதங்­க­ளுக்கு மேலாக அதி­கூ­டிய வறட்­சி­யி­னால் பெரி­தும் பாதிக்­கப்­பட்­டி­ருந்த­து. இத­னால் மன்­னார் மாவட்­டத்­தில் மிக முக்­கி­ய­மான பெரிய குளங்­கள் வற்றி மிக ஆழம் கொண்ட கிண­று­க­ளில் கூட தண்­ணீர் இல்­லா­மல் போகவே மக்­கள் தண்­ணீ­ருக்­காக பெரும் சிர­மங்­களை எதிர் நோக்­கி­யி­ருந்­தார்­கள்.

,ஆனால் மன்­னார் மாவட்­டத்­தில் கடந்த இரண்டு வாரங்­க­ளாக நல்ல மழை வீழ்ச்சி ஏற்­பட்டு ,வயல்­கள் சிறு குளங்­கள் மட்­டு­மல்­லாது பெரிய குளங்­க­ளி­லும் தண்­ணீர் நிறைந்து காணப்­ப­டு­வ­தால் ,சில விவ­சா­யி­கள் வயல்­களை விவ­சா­யத் திற்கு தயார் படுத்­து­வதைக் காணக் கூடி­ய­தாக உள்­ளது.

ஆனால் முச­லிப் பிர­தே­சத்­தில் உள்ள குளங்­கள் எது­வும் சீர­மைக்­கப்­ப­டா­மை ­யால், மழை நீர் முற்று முழு­தாகக் கட­லில் கலந்­து­வி­டு­கி­றது .இத­னால் பெரும்­போக நெற்­செய்கை முச­லிப்­பி­ர­தே­சத்­தில் கேள்­விக்­கு­றி­யாக உள்­ளது .இதற்­கான பொறுப்­பினை முசலி நீர்­பா­ச­னத் திணைக்­க­ளமே ஏற்க வேண்­டும் என்­றும் தெரி­வித்த தவி­சா­ளர் இது பற்றி மேலும் தெரி­விக்­கை­யில்:

முச­லிப் பிர­தேச மக்­கள் கடந்த 2009 ஆம் ஆண்­டில் மீள்­கு­டி­யேற்­றம் செய்­யப்­பட்­ட­வர்­கள். இவர்­கள் பிர­தா­ன­மாக விவ­சா­யம் கடல்த்­தொ­ழில் செய்­தா­லும் ,இவர்­க­ளது பிர­தான தொழில் விவ­சா­யம் மட்­டுமே.

உயி­லங்­கு­ளத்­தில் இயங்­கும் நீர்­பா­ச­னத் திணைக்­க­ளத்­தின் உப அலு­வ­ல­கம், முசலி வேப்­பங்­கு­ளத்­தில் அமைக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த அலு­வ­ல­கம் அமைக்­கப்­பட்­டா­லும் முசலி நீர்­பா­ச­னத் திணைக்­கள உப அலு­வ­ல­கத்­தின் செயற்­பா­டு­கள் திருப்­தி­க­ர­மாக இல்லை.</p><p>கார­ணம் மன்­னார் மாவட்­டத்­தில் உள்ள மூன்று பெரிய குளங்­க­ளில் ஒன்று விளா­ய­டிக்­கு­ளம் இது முசலி ப் பிர­தே­சத்­தில் உள்­ளது.

இதற்­கும் கீழ் ஒன்­பது குளங்­கள் உள்­ளது. இவை நீர்­பா­ச­னத் திணைக்­க­ளத் துக்கு உரித்­தா­னது. இந்த ஒன்­பது குளம் சீர­மைப்­பிற்கு பெருந்­தொ­கை­யான பணம் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் சீர­மைப்­புப் பணி­கள் நல்ல முறை­யில் நடை­பெ­றா­மல், சிறு தொகை­க­ளுக்­குள் மேம்­போக்­காக செய்து பாரிய ஊழல் மோசடி நடை­பெற்­றுள்­ள­தாக சந்­தே­கிக்­கின்­றேன். சீர­மைப்­புப் பணியை நீர்­பா­ச­னத் திணைக்­க­ளம் செய்­வ­தாக காட்­டிக் கொண்டு, முச­லிப் பிர­தேச நீர்­பா­ச­னத் திணைக்­கள அதி­காரி தனிப்­பட்ட முறை­யில் அரச வேலைத்­திட்­டங்­களை செய்­கி­றார். இதன் கார­ண­மா­கவே முச­லிப் பிர­தே­சத்­தின் குளங்­கள் சீர­மைக்­கப் பட்­டா­மல், குளங்­க­ளில் நீர் தங்­கு­தல் இன்றி வீணா­கக் கட­லில் கலக்­கி­றது. இத­னால் விவ­சா­யத்தை பல வழி­க­ளில் நம்பி வாழும் மக்­கள் எதிர்­கா­லத்­தில் என்ன செய்­வது என்று தவித்­துக் கொண்­டி­ருக்­கின்­றார்­கள் என முச­லிப் பிர­தேச சபை தவி­சா­ளர் சுபி­கான் தெரி­வித்­தார்.

இந்த குற்­றச்­சாட்டு பற்றி முசலி சிலா­வத்­து­றைப் பகுதி நீர்ப்­பா­ச­னப் பொறி­யி­ய­லா­ளர் சுகி­த­ர­னி­டம் கேட்­ட­போது: இந்­தக் குற்­றாச்­சாட்­டா­னது கண்­டிக்­கத் தகக்­கது. முச­லிப் பிர­தே­சத்­தில் அவ­ச­ர­மாக சீர­மைக்­கப்­பட வேண்­டிய குளங்­கள் சீர­மைப்­புப் பணி­கள் நடந்து கொண்­டி­ருக்­கி­றது. விளா­ய­டிக் குளத்­தின் கீழுள்ள ஆறு குளங்­க­ளில் கோர­மோட்டை குளம் 16 மில்­லி­யன் ரூபா செல­வில் பணி நடந்து கொண்­டி­ருக்­கி­றது பிச்­ச­வா­னி­ப­கு­ளம் வேலை நிறைவு பெற்­று­விட்­டது.

பெரிய குளக்­கட்டு வேலை­க­ளின் தரம் கருதி தனி­யா­ருக்கு கொடுக்­கா­மல், எமது திணைக்­க­ளமே அவற்றை செய்­கி­றது. நீர்­பா­ச­னத் திணைக்­க­ளத்­திற்கு உரிய சிறிய குளங்­கள், வீதி­களை அவ்­வூர் விவ­சாய அமைப்­பு­களே செய்­கி­றது. முசலித் தவி­சா­ள­ரின் குற்­றச்­சாட்டு அர்த்­த­மற்­றது. என்­னு­டன் தனிப்­பட்ட கோபத்­தி­னால் பழி தீர்ப்­ப­தற்­காக அவர் இவ்­வாறு குற்­றம் சாட்­டு­வ­தாக முசலி சிலா­வத்­துறை நீர்ப்­பா­ச­னப் பொறி­யி­ய­லா­ளர் தெரி­வித்­தார் .

Leave a comment