கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்று திடீரென வெடித்து சிதறியதால் குறித்த பகுதியில் சற்று பதற்ற நிலை ஏற்பட்டது.
இந்தியாவில் இருந்து கடந்த 3 நாட்களுக்கு முன்னர் இலங்கைக்கு கொண்டுவந்த இரசாயன பொருட்கள் அடங்கிய கொள்கலனே இவ்வாறு வெடித்துள்ளதாக துறைமுகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த கொள்கலன் பங்களாதேஷிற்கு அனுப்புவதற்கு தயாராக இருந்த நிலையில் திடீரென வெடித்து சிதறியுள்ளது.குறித்த கொள்கலன் இருந்த வாகனத்தை ஓட்டிய சாரதி அதிர்ச்சியடைந்த நிலையில் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

