ஐநாவின் நடவடிக்கை குறித்து சிறிசேன அதிருப்தி

220 0

இலங்கை இராணுவ அதிகாரியை மாலியிலிருந்து திருப்பியழைக்குமாறு ஐநா விடுத்துள்ள வேண்டுகோள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

இராணுவ அதிகாரி தொடர்புபட்ட விவகாரத்தில் இலங்கை மனித உரிமை ஆணையகத்திற்குள்ள தொடர்பு குறித்தும் சிறிசேன கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்து விசாரணை செய்வதற்காக முன்னாள் ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் நியமித்திருந்த நிபுணர் குழுவில் இடம்பெற்றிருந்த யஸ்மின் சூக்கா முன்வைத்த குற்றச்சாட்டுகளே இராணுவ அதிகாரியை திருப்பி அழைக்குமாறு ஐநா  வேண்டுகோள் விடுப்பதற்கான காரணம் எனவும் அவர்; குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் இராணுவ அதிகாரியை விலக்கிக்கொள்ளுமாறு எங்கள் மனித உரிமை ஆணையகமே வேண்டுகோள் விடுத்திருந்தால் அது துரதிஸ்டவசமானது என சிறிசேன தெரிவித்துள்ளார்.இதேவேளை  இலங்கை மனித உரிமை ஆணையகம் முன்வைத்த குற்றச்சாட்டுகளே இராணுவ அதிகாரி குறித்த சர்ச்சைக்கு காரணம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

Leave a comment