மரண வீட்டிற்கு சென்று திரும்பி வந்தவர் மரணம்

343 0

மரண வீடு ஒன்றிற்கு சென்ற திரும்பி வந்து கொண்டிருந்த வேன் ஒன்று மதில் ஒன்றுடன் மோதியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விதானகே தொன் பியதாஸ எனும் 63 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று (21) மாலை இரத்தினபுரியில் உள்ள மரண வீடு ஒன்றிற்கு சென்று மீண்டும் மதுகம நோக்கி திரும்பி வரும்போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து ஏற்படும் போது வேனில் நால்வர் இருந்ததுடன் வாகன ஓட்டுனர் உட்பட காயமடைந்தவர்கள் வெத்தேவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெத்தெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக நாகொட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பில் அகலவத்த பொலிஸார்மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment