ஜெ., இறுதி சடங்கிற்கு அரசு செலவு எவ்வளவு?

204 0

மறைந்த முதல்வர், ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கிற்கு, தமிழக அரசின் சார்பில், 1 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ள விபரம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக, தெரிய வந்து உள்ளது.
மதுரை, கே.கே.நகரை சேர்ந்த, சையது தமீம் என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ஜெ., இறுதிச் சடங்கு நிகழ்ச்சிக்கான செலவு விபரம் கேட்டு, முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் பொது தகவல் தொடர்பு அதிகாரிக்கு, கடிதம் எழுதியிருந்தார். இதற்கு, பொதுப்பணித் துறை சார்பில் பதில் தரப்பட்டுள்ளது.

அதில், ‘ஜெ., இறுதிச் சடங்கு நிகழ்ச்சிக்காக, 99.33 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. ‘அப்பல்லோ மருத்துவமனையில், ஜெ., சிகிச்சை பெற்றதற்கான செலவை, தமிழக அரசு தரவில்லை’ என, கூறப்பட்டுள்ளது.

Leave a comment