தமிழர் தலைநகரில் ஒல்லாந்தர் காலத்து நாணயம் கண்டுபிடிப்பு!

476 0

தமிழர் தலைநகரான திருகோணமலை – மூதூர் மத்திய கல்லூரி வளாகத்தில் ஒல்லாந்தர் காலத்து நாணயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலையில் பிரதான வாசலுக்கு முன்னால் இந்த நாணயம் காணப்பட்டுள்ளது. பாடசாலைக்கு சமூகமளித்த மாணவன் ஒருவர் VOC என குறிப்பிடப்பட்டுள்ள குறித்த நாணயத்தை கண்டெடுத்துள்ளார்.

தி/மூ/மூதூர் மத்திய கல்லூரி அமைந்துள்ள இடத்தில் தான் இலங்கையில் ஒல்லாந்தர்களின் முதலாவது கோட்டை அமைக்கப்பட்டது. இதை இந்த நாணயம் ஊர்ஜிதப்படுத்துகின்றதாக வரலாற்று ஆய்வாளரும், அக் கல்லூரியின் பிரதி அதிபருமான ஜனாப்.எஸ்.எம்.பிஸ்ரி தெரிவித்துள்ளார்.

VOC என்பது ஒல்லாந்தர் கால “கிழக்கிந்திய கம்பனி” எனும் பெயரைக் குறிக்கும் சுருக்கக் குறியீடாகும். அந்த நாணயத்தில் 1750ஆம் ஆண்டு என பொறிக்கப்பட்டுள்ளது.

Leave a comment