அரிசிக்கான உத்தரவாத விலை அறிமுகம்

289 0

அரிசிக்கான உத்தரவாத விலையை அறிமுகம் செய்ய விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.

அடுத்த வருடம் முதல் இது அமுலுக்கு வரவிருக்கிறது.

சந்தை விலையை விட பத்து ரூபா குறைந்த விலையில் அரிசியை விற்பனை செய்ய அரிசி ஆலை உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளார்கள் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அடுத்த மாதம் முதல் PMB என்ற பெயரில் புதிய அரிசி வகையை சந்தைக்கு அறிமுகம் செய்ய நெல் சந்தைப்படுத்தல் சபை தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment