ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

13 0

பலபிட்டிய-மீகெட்டுவத்த பிரதேசத்தில் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக அம்பலாங்கொட பொலிஸ் தெரிவித்துள்ளனர்.

நேற்று (17) இரவு 9.00 மணியளவில் மீகெட்டுவத்த வயோதிப இல்லத்திற்கு அருகே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், காயமடைந்தவர் பலபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

அம்பலங்கொட பொலிஸின் தகவலின்படி இந்த தாக்குதல் தனிப்பட்ட குரோதத்தின் விளைவாக ஏற்பட்டுள்ளது.

பலபிட்டிய, சிரிசேன மாவத்தையைச் சேர்ந்த 29 வயதான தமித் குமார டி சொய்சா என்ற நபரே உயிரிழந்துள்ளார்.

சடலம் பலபிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை இன்று (18) நடத்தப்படவுள்ளது.

சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, அவரை கைது செய்வதற்காக அம்பலாங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Post

கனிய வள பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பு விலக்கிக்கொள்ளப்பட்டது

Posted by - July 26, 2017 0
இலங்கையில் நேற்றும் இன்றும் கனியவள பணியாளர்கள் மேற்கொண்டு வந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் தற்காலிகமாக விலக்கிக்கொள்ளப்பட்டது. இன்று மாலை ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பை அடுத்து இதற்கான முடிவை தொழிற்சங்கங்கள்…

மலையக பகுதிகளில் வாக்காளர் இடாப்பு திருத்தும் பணிகள் ஆரம்பம்

Posted by - May 13, 2017 0
மலையக பகுதிகளில் உள்ள கிராம சேவையாளர் பிரிவுகளில் 2017ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பு திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த இடாப்பு திருத்தும் பணி எதிர்வரும் ஜுன் 30ஆம்…

தேர்தல் முறைமை தொடர்பில் எழுந்துள்ள சிக்கல் நிலையே மாகாணசபை தேர்தல் பிற்போடப்பட்டுவருவதற்கு காரணம்!

Posted by - August 24, 2018 0
தேர்தல் முறைமை தொடர்பில் எழுந்துள்ள சிக்கல் நிலையே மாகாணசபை தேர்தல் பிற்போடப்பட்டுவருவதற்கு காரணமாகும்.

அதிவேக வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகளுக்கு ஒரு முக்கிய கோரிக்கை.!

Posted by - October 14, 2017 0
சீரற்ற கால­நிலை இன்னும் சில தினங்­க­ளுக்கு தொட­ரு­மென வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. அத்­துடன் மழை­வீழ்ச்சி அதி­க­ரிக்­கும்­போது காற்றின் வேகம் மேலும் பன்­ம­டங்கு அதி­க­ரிக்கும் எனவும் அத்­தி­ணைக்­களம் எதிர்­வு­ கூ­றி­யுள்­ளது.

நாமல் உள்ளிட்ட ஐவரின் வங்கிக் கணக்குகளை பரிசோதிக்க நீதிமன்றம் உத்தரவு!

Posted by - January 31, 2017 0
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவரின் வங்கிக் கணக்குகளை பரிசோதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published.