சவால்களைக் கண்டு ஓடி ஒளிய மாட்டோம்- ரணில்

178 0

பொருளாதார ரீதியாக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் எதிர்கொள்ளும் சவால்களைக் கண்டு ஓடி ஒளியாமல் அவற்றை துணிச்சலுடன் எதிர் கொண்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

குருநாகல் மாவட்ட எஹெட்டுவெவ பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

மூன்று வருடங்களுக்கு முன்னர் இருந்த சவால்கள் இன்று இல்லை. எனினும் உள்நாட்டு கடன் பிரச்சினை, வெளிநாட்டு எரிபொருள் மற்றும் நாணய பெறுமதி வீழ்ச்சி என்பன எமது பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்துகின்றன. இவை நாம் உருவாக்கிய பிரச்சினைகள் அல்ல. எனினும் இவற்றைக் கண்டு ஓடி ஒளியாமல் துணிச்சலுடன் அவற்றைத் தீர்ப்பதுவே தமது கடப்பாடாகும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்யுள்ளார்.

Leave a comment