நல்லாட்சி ஒப்பந்தத்தை இலகுவாக முடித்துக் கொள்ள முடியாது- பீ. ஹரிசன்

286 0

இந்த நல்லாட்சி ஒப்பந்தம் என்பது நினைத்தவாறு முடித்துக் கொள்ளபடும் ஒன்றல்ல எனவும், குறிப்பிட்ட காலம் முடியும் வரை இந்த இணைப்பு நிலைத்திருக்கும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர் பீ. ஹரிஸன் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இந்த அரசாங்கத்தை உரிய காலம் வரை முன்னெடுக்கும் எனவும் அவர் மேலும் கூறினார்.

இன்று காலை தனியார் வானொலி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

Leave a comment