அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகில் பாரிய கடற்படை தளத்தை அமைப்பதற்கு முயற்சி

72221 0

சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ள  அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகில் பாரிய கடற்படை தளத்தை அமைக்கும் முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

புதிய கடற்படை தளத்தை மிக நவீன ராடார் கருவிகளை உள்ளடக்கியதாக உருவாக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற சர்வதேச மாநாடொன்றில்  இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி டிரவைஸ் சின்னையா இதனை உறுதி செய்துள்ளார்.

வெளிநாட்டு இராஜதந்திரிகள் கடற்பாதுகாப்பு தொடர்பான சர்வதேச நிபுணர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகம் சீனா தளமாக விளங்கப்போகின்றது அங்கு சீனாவின் கடற்படை கலங்கள் தரித்துநிற்கப்போகின்றன என பெரும் ஊகங்கள் காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் அம்பாந்தோட்டை துறைமுகம் வர்த்தக துறைமுகமாகவே உருவாக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் பொருளாதார நலன்களுடன் தொடர்புடையது  என்பது வெளிப்படை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நான் கடற்படை தளபதியாக பணியாற்றிய வேளை அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பு குறித்து அரசாங்க மட்டத்தில் தீவிரமாக ஆராயப்பட்டது இராணுவத்தை பயன்படுத்தி துறைமுகத்தை பாதுகாக்கவேண்டும் என்ற எண்ணமும் காணப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாகவே புதிய கடற்படைதளத்தை உருவாக்கும் முயற்சிகள் இடம்பெறுகின்றன  என தெரிவித்துள்ள முன்னாள் கடற்படை தளபதி இந்த தளம் இலங்கையில் உள்ள மிகப்பெரிய கடற்படை தளமாக காணப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a comment